இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,000 சிறுமிகள் தாயாகியுள்ளதாக தெரிய வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸாரின் அறிக்கையின்படி கடந்த நவம்பர் மாதம் மட்டும் பத்து சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகத் தெரிய வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வயது குறைந்தவர்கள் தாயாக மாறுவது சமூக மற்றும் சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply