ஹோமாகம, கொடகம பகுதியில் வீதியில் நின்று கொண்டிருந்த 6 இளைஞர்கள் மீது கார் மோதிய காட்சிகள் அங்கு காணப்பட்ட சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூன்று இளைஞர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு இளைஞரின் முன்பற்கள் பல உடைந்துள்ளதாகவும் ஏனைய இளைஞர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம, பனாகொட பிரதேசத்தில் உள்ள இரவு உணவகம் ஒன்றுக்கு அருகில் விபத்தில் சிக்கிய இளைஞர்கள் குழு வீதியில் பாடல்களை பாடிக்கொண்டிருந்த போது, மற்றொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்குப் பழிவாங்கும் விதமாக மற்றைய இளைஞர்கள் குழுவினர் காரில் வந்து இவர்களை மோதி விட்டுச் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் காரின் இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொரலஸ்கமுவ இரத்தினபிட்டிய பிரதேசத்தில் உள்ள முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
குறித்த கார் இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருக்கு வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக அந்த முகவரியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.