விஷ்ணுவின் சகோதரிகள் வந்ததை அறிந்து பூர்ணிமாவின் முகத்தில் திகைப்பும் ஆர்வமும் தென்பட்டது. அவர்களைப் பார்ப்பதற்கு முன், கண்ணாடியின் தன்னைப் பார்த்துக் கொண்டு ஒப்பனையை சரிசெய்து கொண்டு கிளம்பியது ஒரு அட்டகாசமான தருணம்.
விஷ்ணுவின் சகோதரிகள் வந்ததை அறிந்து பூர்ணிமாவின் முகத்தில் திகைப்பும் ஆர்வமும் தென்பட்டது. அவர்களைப் பார்ப்பதற்கு முன், கண்ணாடியின் தன்னைப் பார்த்துக் கொண்டு ஒப்பனையை சரிசெய்து கொண்டு கிளம்பியது ஒரு அட்டகாசமான தருணம்.
விஷ்ணுவின் சகோதரிகள் வந்ததை அறிந்து பூர்ணிமாவின் முகத்தில் திகைப்பும் ஆர்வமும் தென்பட்டது. அவர்களைப் பார்ப்பதற்கு முன், கண்ணாடியின் தன்னைப் பார்த்துக் கொண்டு ஒப்பனையை சரிசெய்து கொண்டு கிளம்பியது ஒரு அட்டகாசமான
இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கின் மூலம் அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஒரு பொதுவான செய்தி இருக்கிறது. தங்களுடைய பிள்ளைகளை பொதுவில் விட்டுக்கொடுத்து பேசவேகூடாது. குறைகளைப் பொதுவில் சொல்லி அம்பலப்படுத்தக்கூடாது. அது பிள்ளைகளின் மனதைப் பாதிக்கக்கூடும். குறைகளை தனிமையில்தான், அதுவும் இதமாகச் சொல்ல வேண்டும்.
இந்த எபிசோடில் நிக்சன் மற்றும் அவரது தந்தையின் உறவு கவனிக்கத் தகுந்ததாக இருந்தது. பொதுவாகவே அப்பனுக்கும் மகனுக்குமான உறவு எப்போதும் ஒத்துப் போகாது. தந்தையின் கண்டிப்பை வெறுக்கும் பிள்ளைகளே அதிகம். இளம் பிராயத்தின் முதிராத தன்மை அது.
ஆனால் அப்பாதான் அவர்களுக்குள் ஹீரோவாக இருப்பார்கள். உள்ளுக்குள் அந்த பாசம் இருக்கும். பிள்ளைகள் வருங்காலத்தில் தந்தையான பிறகுதான் தனது அப்பாவின் தியாகங்களை உணர்ந்து காலம் கடந்து கண்ணீர் சிந்துவார்கள். அவ்வாறல்லாமல் இருக்கும் போதே அந்த உறவை சீராக அமைத்துக் கொள்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 20-12-2023 Vijay Tv Show- Day 80
Bigg Boss 7 Day 79 : `விஷ்ணு பூர்ணிமாவோட அண்ணன் மாதிரி!’ – வீட்டில் நடந்த ட்விஸ்ட்- (வீடியோ)
“யாராவது குறை சொன்னா, உடனே அதைப் பத்தி கேட்டுரு” எனறு அவர் சொன்ன உபதேசம் நன்று. கமலும் அதைத்தான் சொன்னார்.
போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி, ஒவ்வொரு சீசனிலும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ இந்த எபிசோடில் அதுதான் நடைபெற்றது.
ஒவ்வொரு பெற்றோராக வரவழைத்து சில மணி நேரங்களில் அவர்களை திருப்பி அனுப்பி விடுவதுதான் இதுவரையான வழக்கம். ஆனால் இந்த முறை சிலரின் பெற்றோர்கள் நீண்ட நேரம் இருந்து கலந்துரையாடியது நல்ல அம்சம்.
இந்த டாஸ்க்கில் வழக்கமான சென்டிமென்ட் அழுகாச்சியெல்லாம் பெரிதாக இல்லாமல் பெற்றோர்கள் மிக இயல்பாக உரையாடியது சுவாரசியம். பிள்ளைகளின் நண்பர்களுடன் எவ்வாறு உரையாடுவது, இணக்கமாகக் காட்டிக் கொள்வது, பழகுவது என்பது ஒவ்வொரு பெற்றோரும் கற்றுக் கொள்ள வேண்டிய கலை.
அந்த வகையில் இன்று வந்த அனைவருமே நிறைவான அனுபவத்தைத் தந்தார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?