பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.
இவர் தெஹிவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.