யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவரும் மூதாட்டியின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டுக்குச் சென்ற சில சந்தேக நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply