புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக இந்த நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பலர் உறவினர்களை சந்திக்கவும், குழந்தைகளின் கல்வியை கவனிக்கவும் வெளிநாடு சென்றுள்ளனர்.
வெளிநாடு சென்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மைய நாட்களில் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியாவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பங்களாவின் அறைகள் இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கத்தவர்கள் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட நூறு எம்.பி.க்கள் அந்த பங்களாவை முன்பதிவு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.