வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார். இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு வந்த உத்தியோகத்தர்கள் தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். தந்தையார் வேலைக்கு சென்றதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாய், தந்தை இருவரையும் சங்கானை பிரதேச செயலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குறித்த நபர் தினமும் குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் மீது தாக்குதல் நடாத்துவதாகவும், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் அயலவர்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் பிள்ளைகளுக்கு செய்யும் கொடுமைகள் குறித்து தாயார் இதுவரை எந்தவிதமான முறைப்பாடுகளும் செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply