2024 புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜப்பானை பேராபத்து தாக்கியுள்ளது. ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கத்தால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2.08 மீட்டர் வரை அலைகள் கரையை அடையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜப்பானில் பதிவான நிலநடுக்கங்களின் தாக்கமாக தென் கொரியாவிலும் ஒரு சில பகுதிகளில் சிறியளவில் சுனாமி ஏற்பட்டுள்ளது.

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவிவன் போஸ்னியா- ஹெர்சகோவினா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது.சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சாகலின் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள மக்களை வெளியேற்ற ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply