யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞன் ஆகிய மூவரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் , இளைஞனை யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply