2023 ஆம் ஆண்டு 14,66,556 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இந்த ஆண்டு சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை நாட்டுக்கு சுமார் 719,978 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் சமூக கட்டமைப்பின் அமைதியின்மை ஆகிய காரணிகளால் சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்ததாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகிறது.
2023 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை ஒவ்வொரு மாதமும் உயர்வடைந்துள்ளன.
கடந்த ஆண்டு மாத்திரம் 14 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு பல விசேட செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
பல நாடுகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன. இதற்கமைய இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளது.