கொஸ்லந்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் கொஸ்லந்தை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய டி. விமலாவதீ மற்றும் 70 வயதுடைய குணதாஸ என்பவர்களாவர்.
இந்த சம்பவத்தில் பெண்ணின் சடலம் வீட்டு தோட்டத்தில் உள்ள மின்சார கம்பத்திற்கு அருகிலிருந்தும் ஆணின் சடலம் வீட்டிற்கு அருகாய் செல்லும் வீதியிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களது மகள் வெல்லவாய பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில் புத்தாண்டு விடுமுறை நிமித்தம் பெற்றோரை பார்க்க வந்த போது அவரது பெற்றோர் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.