மொரந்துடுவ பகுதியில் உள்ள வீதியோர உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீதியோர உணவகம் அருகே கொள்ளையடிக்கத் தயாராகி வருவதை வீடியோ காட்சிகள் காட்டுகிறது.
சங்கிலியைப் பறித்த பிறகு, அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்யத் தவறியதால், உணவகத்தில் இருந்து ஒரு நபரால் பிடிக்கப்பட்டார்.
எனினும், சந்தேக நபர்கள் இருவரும் உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர்.