பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தையும் பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவான சோசியல் இன்டிகேட்டர் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 38.5 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்,இவர்களில் 72 .6 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 28.4 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர் இதேவேளை 71.1 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.