Notice: Function add_theme_support( 'html5' ) was called incorrectly. You need to pass an array of types. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.6.1.) in /home7/ilakkiyainfo/public_html/wp-includes/functions.php on line 6078
ராமர் கோவில் கும்பாபிஷேகம் - விரதம் காரணமாக தரையில் படுத்துறங்கும் பிரதமர் மோடி | ilakkiyainfo
Site icon ilakkiyainfo

ராமர் கோவில் கும்பாபிஷேகம் – விரதம் காரணமாக தரையில் படுத்துறங்கும் பிரதமர் மோடி

“அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக விரதம் இருக்க துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் அவர் நாடு முழுக்க பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 11 நாட்கள் விரதம் இருக்கும் பிரதமர் மோடி தனது உணவில் வெங்காயம், பூண்டு மற்றும் பல்வேறு பொருட்களை சேர்த்துக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர பிரதமர் மோடி போர்வையை மட்டும் வைத்துக் கொண்டு இரவில் தரையில் படுத்து உறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர் தேங்காய் தண்ணீரை மட்டுமே குடித்து வருவதாக கூறப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் ஜனவரி 12-ம் தேதி துவங்கி தினமும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. “,

 

Exit mobile version