யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் , அதீத போதைப்பொருள் பாவனையாலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி விடுதலையான இளைஞன் செவ்வாய்க்கிழமை (30) இரவு , வீட்டில் மூச்சின்றி காணப்பட்டதை அடுத்து , இளைஞனை வைத்தியசாலை வீட்டார் கொண்டுச் சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதீத அளவில் போதைப்பொருளை நுகர்ந்தமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply