“தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எஸ்.டி.ஆர்.48 போஸ்டர்இந்நிலையில், சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனல் பறக்க இரண்டு சிம்பு நேருக்கு நேர் பார்த்து நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
&
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.#STR48 #BLOODandBATTLE@desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SnqR4dU84x
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2024
nbsp;