கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்.7 -ஆம் திகதி ஹமாசின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 190 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹாமஸ் மோதல் வெடித்ததிலிருந்து இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை அணுகுவதைத் தடுப்பதால், இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.