இரு பிள்ளைகளை தாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தை இன்று புதன்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் திம்புள்ள – பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் கடந்த 5 ஆம் திகதி 9 மற்றும் 5 வயதுடைய தனது இரு பிள்ளைகளையும் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த (05) திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலைய கட்டளை.
சந்தேக நபரின் மனைவி வேலை நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளும் தனது பாட்டியின் அரவணைப்பில் இருந்துள்ள நிலையில், சந்தேக நபரான தந்தை கொழும்பு பிரதேசத்தில் உள்ள வாகனம் சுத்தம் செய்யும் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரு பிள்ளைகளையும் பல தடவைகள் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.