இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28 ஆயிரத்து 493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.