பொதுப் போக்குவரத்து சேவைகளின் போது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கைதானவர்களில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 18 பேரும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது, பெண்களுக்கு எதிராக பல்வேறு வகையான துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டன.