யாழ்ப்பாணம் – தென்மராட்சி – A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது.

A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Share.
Leave A Reply