ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள சொளவனூரைச் சேர்ந்தவர் 38 வயதான ராணி. இவருக்கு திருமணமாகி கணவர் இறந்த நிலையில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
ஈரோடு மாவட்டத்தில், வேறொரு நபருடன் பழகிய பெண்ணை, அவரது கள்ளக்காதலன் மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். முக்கோண காதல் விவகாரம் கொலையில் முடிந்தது எப்படி?
ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள சொளவனூரைச் சேர்ந்தவர் 38 வயதான ராணி. இவருக்கு திருமணமாகி கணவர் இறந்த நிலையில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 9 வருடங்களாக இதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருடன் திருமணத்தை மீறிய ரகசிய உறவிலிருந்து வந்துள்ளார்.
ராஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில், ராணியின் மீது ஆழமான அன்பை வைத்திருந்தார்.கூலி வேலைக்கு சென்றவர், ராணிக்கு ஆறுதலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராணி சமீப காலமாக வேறொருவருடன் நபரிடம் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அது தெரியவர, காதலி ராணியை ராஜன் கண்டித்துள்ளார்.
அதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், காதலன் ராஜன் உடன் பேசுவதை ராணி நிறுத்திக் கொண்டார் .
9 வருடங்களாக நட்பில் இருந்தவர் பிரிந்து செல்ல முயன்ற போது அது ராஜனுக்கு கடும் ஆத்திரத்தை வரவழைத்தது. பேச்சு வார்த்தைக்கு என வரவழைத்து மண்வெட்டியால் ராணியின் பின்னந்தலை மற்றும் உச்சி மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழந்த ராணி சுயநினைவை இழந்துள்ளார்.
விளம்பரம்
பின்னர் ராஜன் அங்கிருந்து தப்பி ஓட, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ராணி உயிரிழந்தார்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவான ராஜனைத் தேடி வந்தனர்.
போலீசார் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த ராஜன், வி.ஏ.ஒ-விடம் சரணடைந்தார். பின்னர் தகவலறிந்து சென்ற போலீசார், குற்றவாளி ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விளம்பரம்
ரகசிய காதலி, வேருடன் பழகியதால் அவரை மண்வெட்டியால் அடித்து கூலித்தொழிலாளி கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.