ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதிபர் விளாதிமிர் புதினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்டவர் நவல்னி. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகப் பரவலாகக் கருதப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆர்க்டிக் தண்டனை காலனி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைத்துறை, அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய முயன்று வருகிறது எனக் கூறியுள்ளதாக, டாஸ்(Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், “அவரது மரணம் குறித்துத் தங்களுக்கு இன்னும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டார் சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.