யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் மத்தி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீது நேற்று திங்கட்கிழமை (19) வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply