லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார்.
வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார்