மாஸ்கோ: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரோந்து கப்பலை தங்களது ட்ரோன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக உக்ரைனின் பதிலடி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், இன்று ரஷ்யாவின் ரோந்து கப்பலை, உக்ரைன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், உக்ரைன் ராணுவம் இதை உறுதி செய்திருக்கிறது.

Ukraine destroys Russian Project 22160 patrol ship with drone attack ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தி அருகே, அந்நாட்டின் ‘ப்ராஜெக்ட் 22160′ எனும் ரோந்து கப்பல், இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது ஆளில்லாத படகு ஒன்று இந்த கப்பல் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இதில் கப்பலின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து,

ஒரு சில நிமிடங்களில் முழு கப்பலும் கடலில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் ஒரு ஹெலிகாப்டரும் இருந்திருக்கலாம் என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

மகுரா V5 எனும் ட்ரோன் படகு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. உக்ரேனிய ராணுவத்தில் இருக்கும் இந்த வகை படகுகள், ரோந்துக்காகவும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்படும்.

மணிக்கு 78 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த படகில் 200 கிலோ வரை வெடி பொருட்களை கொண்டு செல்ல முடியும். ஏற்கெனவே ரஷ்ய நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பலை கடந்த மாதம் இந்த படகு தாக்கி அழித்திருக்கிறது.

தற்போது அழிக்கப்பட்ட’ப்ராஜெக்ட் 22160’ எனும் கப்பல், ரூ.538 கோடி மதிப்புள்ளதாகும். இது ரோந்துக்கப்பல் என்று பரவலாக அறியப்பட்டாலும், கருங்கடல் பகுதியில் இக்கப்பலை மிஞ்ச ஆள் கிடையாது.

அந்த அளவுக்கு தன் உள்ளே ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும். மொத்தமாக இதுபோன்று 4 கப்பல்கள்தான் ரஷ்யாவிடம் இருக்கின்றன.

ஏற்கெனவே 1 கப்பல் அழிந்துவிட்டது. தற்போது இது இரண்டாவது கப்பலும் அழிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கப்பலை ரஷ்யா இழந்திருப்பது அந்நாட்டின் கடற்படைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போரில் பலியாகும் இந்திய உயிர்கள்.. ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்த குஜராத் இளைஞர் உடல் சிதறி மரணம் உக்ரைன் போரில் பலியாகும் இந்திய உயிர்கள்..

ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்த குஜராத் இளைஞர் உடல் சிதறி மரணம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று ‘சீசர் குனிகோவ்’ எனும் கப்பலை உக்ரைன் தாக்கி அழித்திருந்தது.

துறைமுகங்களின் உதவியின்றி நேரடியாக கடற்கரை வரை வரும் வகையில் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

கடற்கரையில் நேரடியாக பீரங்கிகள், டாங்கிகள், ராணுவ துருப்புக்களை தரையிறக்க இவை பயன்படுத்தப்பட்டது.

இந்த கப்பலையும் ட்ரோன் மூலம் தாக்கி உக்ரைன் ராணுவம் அழித்திருந்தது. ரஷ்யா-உக்ரைன் எல்லையான கிரிமியாவின் கருங்கடல் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோவையும் உக்ரைன் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply