ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் கருங்கடலில் ரோந்தில் ஈடுபட்ட ரஷ்ய போர் கப்பலை உக்ரைன் தகர்த்துள்ளது. இது உக்ரைன் போர் நடவடிக்கையில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகின்றது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷ்யா போர் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த போரில் உக்ரைன் மிக பெரிய இழப்பை ஆரம்பத்தில் சந்திக்க நேரிட்டது. ஆனால் தற்போது உக்ரைனின் பதில் தாக்குதல்கள் ரஷ்யாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ரஷ்ய கப்பல்கள் உக்ரைனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
உக்ரைன் கடற்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கியளித்துள்ளது.
538 கோடிரூ பா மதிப்பிலான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரைன் கடற்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கியளித்துள்ளன. இதில், கப்பல் தகர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பில் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் . செர்கெய் கோட்டோவ்-ஐ இதற்கு முன்னதாக தாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம், ரஷ்யாவின் 33 சதவீத கப்பல்களை (23 கப்பல் மற்றும் ஒரு நீமூழ்கி கப்பல்) செயல் இழக்க வைத்து விட்டோம் என உக்ரைன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் தொடங்கியதில் இருந்து இரண்டு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது. இந்த நிலையில் நேற்று கருங்கடலில் இந்த ரோந்துகப்பல் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டுள்ளது.
கருங்கடலில் தங்களது ‘வெற்றிகரமான’ டிரோன் தாக்குதல் மூலம் மற்றொரு ரஷ்ய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான செர்கெய் கோட்டோவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளோம் என உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் 1300 தொன் எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவையும் போரில் கருங்கடல் பரப்பில் உக்ரைனின் கைகள் ஓங்கியிருப்பதனையும் காட்டுவதாக உள்ளது.