• “இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது.உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷியாவிற்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. “,
ரஷியாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும்: இங்கிலாந்து
“ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார்.
அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டிரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண்டு கூடுதலாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது.
10 ஆயிரம் டிரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் டிரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன படைகள் கருங்கடலில் ரஷியாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் டிரான் மூலம் ரஷியாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.”,