அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்து பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றினுள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, காலி – எல்பிடிய, பிடிகல பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது இடம்பெற்ற இந்த அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply