சிலாபம், திகன்வெவ பகுதியில் லொறியொன்று மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் – திகன்வெவ மொரகலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக வந்த குறித்த லொறி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிக் குறித்த இளைஞன் மீது மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளத்தில் விழுந்ததாகவும், லொறியின் இரண்டு சக்கரங்களும் இளைஞனின் மார்பின் மீது ஏறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.