அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் வாகனதரிப்பிடமொன்றில் இளைஞனை கத்தியால் குத்த முயன்றவேளை காவல்துறையினரால் சுட்க்கொல்லப்பட்ட இளைஞன் கத்திக்குத்து முயற்சிக்கு முன்னர் தான் வன்முறைகளில் ஈடுபடப்போவதாகவும் ஜிகாத்தின் பாதையில் பயணிக்கப்போவதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேர்த்தின் தென்பகுதியில் உள்ள விலெட்டனில் சனிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது இளைஞன் நண்பர்களே நான் எவ்வேளையிலாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அல்லாவிற்காக நான் இன்றிரவு ஜிகாத்தின் பாதையில் செல்கின்றேன் என பல தடவை தனது நண்பர்களிற்கு செய்தியனுப்பியுள்ளான்.

நான் முஜாஹிதீன் அல்ஹைதாவின் போர்வீரன் இந்த நடவடிக்கைகளிற்காக நான் பொறுப்பேற்பேன் எனவும் அவன் நண்பர்களிற்கு செய்தி அனுப்பியுள்ளான்.

இந்த செய்தி கிடைத்த பலர் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளனர்.

இந்த சிறுவனிற்கும் எந்த உள்ளுர் மசூதிக்கும் தொடர்பில்லை இந்த சிறுவன் உளநல பாதிப்பிற்குள்ளாகியுள்ளான் 2022 முதல் அதாவது 12 வயது முதல் அவனை காவல்துறையினர் வன்முறை தீவிரவாதத்தை எதிர்க்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்விற்கு உட்படுத்தினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதத்தின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் புனர்வாழ்வுதிட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 வயதிற்கு உட்பட் நால்வரில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனும் ஒருவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply