2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவேளை தனது பாலியல் தொடர்புகள் குறித்த கதைகள் வெளியாவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார் என அவரது முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹென் தெரிவித்துள்ளார்

டிரம்ப் ஆபாசபட நடிகைகள் உட்பட பல பெண்களுடன் தனக்கிருந்த தொடர்புகள் குறித்த கதைகள் வெளியாவதை தடுப்பதற்காக அந்த பெண்களை மௌமாக்குவதற்காக பணம் வழங்கியது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போதே மைக்கல் கோஹேன் இதனை தெரிவித்துள்ளார்.

ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் தனக்கிருந்த தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியில் வருவதை தடுக்கவேண்டும் என டிரம்ப் தெரிவித்தார் என அவரின் முன்னாள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த கதை வெளியில் தெரியவந்தால் பெண்வாக்காளர்களின் வாக்குகளை தான் இழக்கவேண்டியிருக்கும் என டிரம்ப் கவலையுடன் காணப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரென்மக்டொகெல் என்ற பிளேபோய் சஞ்சிகை மொடல் தனக்கும் டிரம்பிற்கும் இடையில் திருமணத்திற்கும் அப்பாற்பட்ட உறவு காணப்பட்டது என தெரிவிக்கின்றார் இது வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யுங்கள் என டிரம்ப் அவ்வேளை தனது சட்டத்தரணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரென்மக்டொகெலிற்கு அவர் டிரம்ப் குறித்த இரகசியங்களை அம்பலப்படுத்துவதை தடுப்பதற்காக 150,000 வழங்கப்பட்டதாக டிரம்பின் முன்னாள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நான் டிரம்பின் வழிகாட்டலின் கீழ் அவரின் நன்மைக்காக செயற்பட்டேன் என கொஹென் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இதுவரை இந்த தகவல்களை நிராகரிக்காதமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply