திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர்  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை  (13) காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் சேனையூர் 6ம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சேனையூர் – மயிலிமலை பகுதியில் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வரும் டிப்பர் வாகனமே மோதியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்  இந்த  டிப்பர் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதி கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக  சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கல்லுடைப்பிற்கு மக்களால் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த 9பேர் கடந்த 11ஆம் திகதி சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பில் ஆராய்வதற்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் சனிக்கிழமை (15) குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று  அவ்விடத்தைப் பார்வையிடவுள்ளனர்.

Share.
Leave A Reply