கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் அருகே அத்தை மருமகன் இடையே ஏற்பட்ட பிரச்சனை என்ன, போலீஸையே தலை சுற்ற வைத்த இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் ரோடு மோட்டு கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்பவருடைய மனைவி சத்யா.

இவருக்கு36 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜூன் 12ம் தேதி மதியம் இவரது வீட்டில் இருந்து யாரோ அலறியபடி கத்தியிருக்கிறார்கள்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்த போது சத்யா கழுத்தில் படுகாயம் அடைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

அவரது அருகில் சத்யாவின் நாத்தனார் மகன் (கணவரின் சகோதரி மகன்) மாரியப்பன் (25) கழுத்தில் வெட்டு காயத்துடன் கிடந்தார்.

இதுபற்றி பொதுமக்கள் உடனடியாக சுண்டேகுப்பம் விஏஓவுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சுண்டேகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் பூபதி காவேரிப்பட்டணம் போலிசிடம் தங்கள் கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சத்யாவுக்கும், அவருடைய நாத்தனார் மகன் மாரியப்பனுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சத்யா குடும்பத்தினர் இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அதில் சத்யா மட்டும் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் மாரியப்பன் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் எல்லாமே தவறாக இருந்தது.. ஏனெனில் கொலை நடந்த நேரம், சத்யாவின் கணவர், மகன்கள் யாரும் அந்த பகுதியில் இல்லை என்பதை முதலில் கண்டுபிடித்தனர்.

மேலும் திடீர் திருப்பமாக கள்ளக்காதலன் மாரியப்பனே சத்யாவை தீர்த்துக்கட்டி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சத்யாவின் கணவர் பழனியின் சகோதரி மகன் மாரியப்பன் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பனகமுட்லு பக்கமுள்ள ஆலமரத்து கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.

சத்யா அந்த பகுதியில் சாலை அருகில் பெட்டி கடை நடத்தி வந்தார். மாரியப்பன் தனது மாமா பழனி வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்.

அப்போது சத்யாவும், மாரியப்பனுக்கும் இடையே கள்ளக்காதல் வளர்ந்துள்ளதாம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் கள்ளக்காதலை வளர்த்துள்ளார்களாம்.

இதனை ஒரு கட்டத்தில் அறிந்த குடும்பத்தினர் சத்யாவையும், மாரியப்பனையும் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே சத்யாவுக்கு வேறு சிலருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதனை அறிந்த மாரியப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தாராம்.

நேற்று முன்தினம் சத்யா வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மாரியப்பன், தனது அத்தையை சந்திக்க வந்துள்ளார்.

அப்போது இருவரும் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது வேறு நபர்களுடன் உள்ள உறவு பற்றி அத்தையிடம் மாரியப்பன் கேட்டாராம்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆத்திரத்தில் மாரியப்பன் சத்யா கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றாராம்.

இந்த தகவல்கள் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் மாரியப்பனால் பேச முடியாத நிலை இருக்கிறது. அவர் முழுமையாக பேசினால் தான், வீட்டுக்குள் என்ன நடந்தது? சத்யாவை கொலை செய்வதற்கான காரணம் என்ன? அப்படியே சத்யாவை கொலை செய்து இருந்தாலும் தானும் எதற்காக தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்கிறார்கள்.

 

Share.
Leave A Reply