ராஜபாளையம் அருகே வீட்டில் லேப்டாப்பை சார்ஜ் செய்தவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ‘சொக்கநாதன்புத்தூரில் உள்ள கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திகுமார். இவரின் மகள் செந்திமயில் (வயது 22). செந்திமயிலுக்கு திருமணம் ஆகிவிட்டது, கணவர் ராஜாராம் சவுதியில் வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு செந்திமயில் தனது லேப்டாப்பை சார்ஜ் செய்தவாறு வேலை பார்த்துள்ளார். அப்போது, லேப்டாப்பின் ‘சார்ஜ் பின்’ பகுதியில் வயர் அறுந்திருப்பது தெரியாமல் செந்திமயில் அதன்மீது கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் கை, விரல்கள் கருகி மூச்சுபேச்சின்றி கிடந்துள்ளார்.

சத்தம்கேட்டு சக்திக்குமார், தன் மகளை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு செந்திமயிலை பரிசேதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரின் உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.

Share.
Leave A Reply