இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து, குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை குரங்கு அம்மையின் அறிகுறிகள் ஆகும்.

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமாணியன் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஒரு இளைஞருக்கு, தற்போது குரங்கு அம்மை தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், சந்தேகத்திற்கிடமான நோயாளி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply