“நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்லும் வீடியோ. குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அதேப்போல் நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டன்ர்.

இந்நிலையில் இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் இரண்டு குழந்தைகளும் ஒரு ரூமின் கதவை திறக்க முயற்சி செய்கின்றனர்.

அதை அவர்களால் திறக்க முடியாதலால். தன்னுடைய தந்தையான விக்கியை “விக்கி அப்பா, விக்கி அப்பா” என்ற மழலை குரலில் அழைப்பது மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply