“அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல மனித உயிர்களை பறிபோக காரணமாக இருந்ததால் அதற்காக பின்னாட்களில் ஐன்ஸ்டீன் மனம் வருந்தினார்.

அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவை பார்த்து ஐன்ஸ்டீன் வேதனை அடைந்தார்.

அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று அவர் எண்ணினார்.

நியூயார்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டீனின் கடிதங்கள் ஏலம் விடுவது ஒன்றும் இது முதன் முறையல்ல.

ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது. “,

Share.
Leave A Reply