“மைன் நீதிமன்றத்தில் குழந்தையை தாக்கிய குற்றத்திற்கு தண்டனை பெற்ற குற்றவாளி அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிக்கோலஸ் கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.

யாரும் எதிர்பாராத சமயத்தில் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறிய கார்ட்டர் படிக்கட்டுகளில் தாவி கீழே வந்தார். கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியே வந்த கார்ட்டரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் துப்பறிவாளர் பிடித்துக் கொண்டனர்.

தப்பி ஓட முயன்ற கார்ட்டரின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அவர் குழந்தையை தாக்கிய குற்றத்தோடு, தப்பிச்செல்ல குற்றத்திற்காகவும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Share.
Leave A Reply