பெய்ரூட் தாக்குதல் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாஅமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,.118,000 மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை நிராகரித்து நேற்றைய தினம் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் உட்பட மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகின.

அயத்துல்லா காமேனி

மேலும் நேற்று இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் தங்களின் தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா காமேனியை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் அரசு மாற்றியுள்ளது.

ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள இடத்துக்கு காமேனி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் மேலும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணதோடு தங்களின் தாக்குதலை முடித்துக் கொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்காமல் தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பதற்றம் ஹிஸ்புல்லா தலைமையகம் மீதும் நஸ்ரல்லாவின் மீதுதான் இந்த தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், சரியான நேரத்திற்காகக் காத்திருந்து தற்போது தாக்குதல் நடத்தியாகவும் இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தலைவர் கொல்லப்பட்டதால் எந்நேரமும் இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தலாம் என்பதால் மொத்த இஸ்ரேளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஹை அலெர்ட் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலின் பெய்ரூட் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க நழுவியுள்ளது.

Share.
Leave A Reply