அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கானபொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்புவழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த பர்ஹாட் சகேரியிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளது.

51 வயது பர்ஹாட் சகேரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ள அமெரிக்க நீதிதிணைக்களம் இவர் டிரம்பினை கொலை செய்வதற்கான திட்டத்தினை வழங்கினார் என  குறிப்பிட்டுள்ளது.

பர்ஹாட் சகேரி இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்கா அவர் ஈரானில் வசிக்கின்றார் என தெரிவித்துள்ளது.

ஈரான் இந்த குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளது

Share.
Leave A Reply