“நான் தமிழ் சினிமால மட்டும்தான் இருக்கேன்” – நடிகர் சித்தார்த்!
மிஸ் யூ திரைப்பட ப்ரமோஷனில் பேசிய நடிகர் சித்தார்த்திடம், செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டு வந்தனர். அப்போது ஒரு நிருபர் சித்தார்த்திடம், ‘நீங்கள் வருஷத்திற்கு ஒரு படத்தில்தான் நடிக்கிறீங்க…’ என்றார்.
இதைக்கேட்டு ஷாக்கான நடிகர் சித்தார்த், “என்ன சார் இப்படி கேட்டுடீங்க.. நான் நடிச்சு வெளிவந்த இந்தியன் 2, வெளிவந்து ஆறு மாசம்தான் ஆகுது. நீங்க என்னடானா நான் தமிழ் சினிமாலேயே இல்லைன்றீங்க…
நான் தமிழ் சினிமால மட்டும்தான் இருக்கேன். நீங்க வேணும்னா, என் நடிப்பை பத்தி எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனா என் வீட்டில் ‘நீ நல்லா நடிச்சு இருக்க, கமல் சார் கூட நடிச்சு இருக்க..’ என்றெல்லாம் பெருமையா பேசினாங்க. நா சென்னையிலதான் இருக்கேன் இங்கதான் வரி கட்டிட்டு வர்றேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பை இங்கே காணலாம்…