பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இந்திய பாரம்பரிய இசையான தபேலாவை உலகெங்கும் பறைசாற்றியவர் மும்பையைச் சேர்ந்த ஜாகிர் உசேன்.

அமெரிக்காவில் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக இதயம் தொடர்பான பிரச்சனை இருந்தது.

இந்நிலையில் அவர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) அவர் காலமானார்.

ஜாகிர் உசேன் 1988ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

1990ல் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும், சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப், 2018ல் ரத்னா சத்யா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2024 பிப்ரவரியில் அவர் மூன்று கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.

Share.
Leave A Reply