“கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 62 பயணிகள் 5 பணியாளர்களுடன் ரஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி உள்ளது.

அஜர்பைஜானில் உள்ள பாகுவிலிருந்து ரஷியாவின் க்ரோஸ்னிக்கு இன்று பறந்து கொண்டிருந்த விமானம் அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது.

அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது என கஜகஸ்தான் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டாவ் விமான நிலையம் அருகே அந்த விமானம் விழுந்து வெடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 42 பேர் வரை உ

யிரிழந்துள்ளதாவும், 14 பேர் பிழைத்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply