“உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள சத்வா கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் என்ற விவசாயி குடும்பத்தினர் தங்கள் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர்.
8 ஆண்டுகளாக அவரது வீட்டில் ஒருவராக வளர்ந்து வரும் அந்த குரங்குக்கு ராணி என்று பெயரிட்டுள்ளனர். ராணி, விஸ்வநாத்தின் மனைவியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஸ்வநாத்தின் மனைவியுடன் சேர்ந்து ரொட்டி தயாரிப்பது, பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்திலும் ராணி உதவி செய்கிறதாம்.
இது தொடர்பான வீடியோக்களை விஸ்வநாத்தின் மகன் ஆகாஷ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அவை வைரலாகி பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
एक बंदरिया 🐒 काम वाली-
यूपी के रायबरेली में रानी नाम की बंदरिया करती है घर के सभी काम,
रानी बंदरिया को बर्तन धुलना, खाना बनाना है पसंद,
खागीपुर संडवा की रानी का वीडियो सोशल मीडिया पर वायरल। @BeingSalmanKhan @kamaalrkhan @azizkavish @karishma_aziz97 @News18UP @priyarajputlive pic.twitter.com/NC3iz65w7k
— Shahbaz Khan (@Shahbazkhan9557) December 30, 2024