இலங்கையில் அரசியலில் ஈடுபட்ட- பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக நியுசிலாந்தில் தஞ்சமடைந்துள்ளமை தீர்ப்பாயமொன்றின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் 32 வயது பெண் அரசியல்வாதியொருவருக்கு நியுசிலாந்து அடைக்கலமளித்துள்ளது.

முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகாக்கள் அந்த பெண் தனது அரசியல்வாழ்க்கையை தொடர்வதற்காக அவருடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும்,என தெரிவித்தனர் அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் இதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர் அவரை பழிவாங்க முயல்கின்றனர்என்பது தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட அரசியல்வாதி 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

குறிப்பிட்ட பெண் அரசியல்வாதியின் உறவினர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தை தொடர்ந்து அவரது இறுதிசடங்கில் பிரேதப்பட்டிக்கு அருகில் அடுத்ததாக அவர் கொல்லப்படுவார் என்ற குறிப்பு காணப்பட்டது.

அந்த பெண் அரசியல்வாதிக்கு இரண்டு முறைமரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, அவரை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது.

2018 பொதுத்தேர்தலிற்கு முன்னர் அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும் என எச்சரித்தனர் தனது வீட்டிற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இலங்கையை சேர்ந்த அந்த பெண் குடிவரவு தீர்ப்பாயத்திடம் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியலில் ஈடுபடும் பெண்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன என தகவல்கள் கிடைப்பதாக நியுசிலாந்தின் தீர்ப்பாயம் தெரிவித்தது.

‘உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அந்த பெண் தெரிவித்தார்” அரசியலில் ஈடுபட நினைத்ததே எனது வாழ்க்கையின் மிக மோசமான தீர்மானம் நான் என்னை இழந்தேன் தோல்வியடைந்தது மாதிரி உணர்கின்றேன்” என அவர்தெரிவித்தார்.

இலங்கைக்கு தான் திரும்பிச்சென்றால் அந்த அரசியல்வாதி தன்னை கொலை செய்வார் தனது அரசியல்வாழ்க்கையை அழித்தமைக்காக பழிவாங்குவார் என அவர் கருதுகின்றார்.

2022 இல் தனது பெற்றோரின் வீடு தீக்கிரையானது என தெரிவித்துள்ள அவர் அவ்வேளை நிலவிய குழப்பத்தை பயன்படுத்தி இதனை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நண்பரின் வாக்குமூலம் இவ்வாறு தெரிவிக்கின்றது -‘ எதிர்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரை பாலியல் உறவிற்கு இணங்க செய்ய முயற்சி செய்ததாலும் அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போனது.

Share.
Leave A Reply