“கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். உடை, காலணி, நகைகள், கைப்பை, கைக்கடிகாரம், கார்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

இன்னொரு புறம் நடிகர் நடிகைகள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கூகுளில் தேடி கண்டுபிடித்து பகிர்வதை சில ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஏற்கனவே விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் தான் நடிக்கும் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது அவர் கையில் அணிந்திருந்த புதிய கைக்கடிகாரம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

அதன் விலையை ரசிகர்கள் கூகுளில் தேடி ரூ.7 கோடியே 47 லட்சம் என்று கண்டிபிடித்து வெளியிட்டுள்ளனர்.

அதை பார்த்த பலரும் கைக்கடிகாரம் இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Share.
Leave A Reply