யாழ். அறுகம்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சனிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இதன்போது மூன்று முறிப்பு, நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 27ஆம் திகதி உறவினரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.

இதன்போது, அறுகம்குளம் பகுதியில் கூட்டமாக இருந்த எருமைகளுடன் மோதி விபத்தில் சிக்கினார்.

பின்னர், அவரை நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply