ரஷ்ய நாசவேலையா இது என்கிற ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது பிரித்தானிய புலனாய்வுத்துறை. ஹீத்ரோ தீ விபத்து குறித்து பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணை செய்கிறார்கள்.

துணை மின் நிலைய தீ விபத்து ஐரோப்பாவில் புட்டினின் தாக்குதல்களின் வடிவத்துடன் பொருந்துகிறது, மேலும் இங்கிலாந்து உள்கட்டமைப்பில் ‘பாதிப்பை’ ஏற்படுத்த அவர் நினைக்கிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ மின்சார வழங்கலில் ஏற்பட்ட ஒரே ஒரு தீ விபத்து, விமான நிலையத்தை முழுமையாக மூடச்செய்தது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணங்களுக்கும் மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள வர்த்தகப் பொருட் போக்குவரத்துக்கும் ஏற்பட்ட இடையூறு, இங்கிலாந்தின் முக்கிய உட்கட்டமைப்பின் மீள்தன்மை குறித்து தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பேரிடர் மீட்புத் திட்டங்கள் தொடர்பான கவனக்குறைவை இது துல்லியமாக காட்டுகின்றன.

வங்கிகள், தரவு மையங்கள், பங்குச் சந்தைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் அவசரத் திட்டங்களைக் கொண்டுள்ளன இங்கே லண்டனில். ஆனால், ஹீத்ரோவுக்கு மட்டும் அது இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

“தேசிய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான உள்கட்டமைப்பான ஹீத்ரோ, மாற்று இல்லாமல் ஒற்றை மின் மூலத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது எப்படி?” என்று விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் கூறினார்.

இந்த தடங்கல் “தெளிவான திட்டமிடல் தோல்வியின்” விளைவாகும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஹீத்ரோவில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார ஆதாரங்கள் உள்ளன என்று நெஷனல் கிரிட் அதிகாரி ஒருவர் கூறினார், ஆனால், ஏற்பட்ட தீ விபத்து “குறிப்பாக முக்கியமான பகுதியை” சேதப்படுத்தியது.

அதாவது, இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு ஏற்ற காப்புப்பிரதி அமைப்புகள், துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது பயனற்றதாக நிரூபிக்கப்பட்டன, இது தேசிய கிரிட் உயர் மின்னழுத்த மின்சாரத்தை குறைந்த மற்றும் பாதுகாப்பான மின்னழுத்தமாக மாற்ற பயன்படுகிறது.

இது அதிக வெப்பத்தை உருவாக்கும் ஒரு செயல்முறையாகும், இது எரியக்கூடிய குளிரூட்டும் எண்ணெய்களைப் பயன்படுத்தி இயங்குகிறது. இந்த தீ விபத்து நிகழ்வில் இதுதான் வெளிச்சத்திற்கு வந்தது. சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஏதேனும் மோசடி நடந்ததா என்று விசாரித்து வருகின்றனர்.

ஹீத்ரோ விமான நிலையம் ஒரு சிறிய நகரத்தைப் போலவே அதிக மின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது, எனவே அதன் செயல்பாட்டைப் பாதுகாப்பாக இயக்குவதற்கு துணை காப்பு மின்சாரத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை.

அதன் மாற்று டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் தடையில்லா மின்சாரம் அனைத்தும் எதிர்பார்த்தபடி இயங்குகின்றன என்று ஹீத்ரோ வட்டாரம் கூறியது. அப்படியானால் விமான நிலையம் மூடப்பட்டது ஏன்?

தேசிய மின் கட்டமைப்பில்தான் சிக்கல் வந்ததால் , விமான நிலையம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் போனது.

ஹீத்ரோவுக்கு அருகில் இரண்டு தேசிய மின் கட்டமைப்பு துணை மின்நிலையங்கள் உள்ளன: விமான நிலையத்திற்கு வடக்கே வடக்கு ஹைடில் ஒன்று, விமான நிலையத்திற்கு தெற்கே லாலேஹாமில் ஒன்று என்று எரிசக்தி பகுப்பாய்வு நிறுவனமான மான்டெல் குழுமம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஹைட் துணை மின்நிலையம் மட்டுமே உள்ளூர் விநியோக வலையமைப்பு மூலம் ஹீத்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று நிறுவனத்தின் இயக்குனர் பில் ஹெவிட் கூறினார்.

“ஒரு முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச உள்கட்டமைப்பு தளத்தில் இந்த மீள்தன்மை இல்லாதது கவலையளிக்கிறது,” என்று அவர் கூறினார். “ஹீத்ரோ போன்ற பெரிய மற்றும் முக்கியமான விமான நிலையம் பாதிக்கப்படக்கூடாது.”

இருப்பினும், சாத்தம் ஹவுஸின் ஆராய்ச்சிக் கூட்டாளியான ரொபின் பாட்டர், ஹீத்ரோ ஆனது பிரிட்டனின் இரு விமான நிலையங்களில் பெரியதாகும் – மற்றொன்று கேட்விக் – இப்பொழுது அதன் மீதும் கவலைகள் எழுந்துள்ளன.

“இவை உண்மையில் பிரிட்டனில் உள்ள சிறந்த விமான நிலையங்கள், அவற்றின் மீள்தன்மை எவ்வாறு மதிப்பிடப்படுகிறது மற்றும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதற்கு,” சான்றாகும்.

2023 ஆம் ஆண்டில், தேசிய உள்கட்டமைப்பு ஆணையம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொலைத்தொடர்பு, நீர், போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற உள்கட்டமைப்பின் சில முக்கிய துறைகளுக்கான தரநிலைகளை அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது.

அந்தத் துறைகளுக்கு அரசாங்கம் அதை எவ்வாறு செய்ய முடியும் என்பதை விவரிக்கும் கூடுதல் அறிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.

அவை அக்டோபர் 2023 முதல் அரசாங்கத்தின் மேசையில் உள்ளன, ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அதன் மின் மீள் அமைப்பு ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்த கேள்விகள் விசாரிக்கப்படும் என்று ஹீத்ரோ வட்டாரம் தெரிவித்துள்ளது.

21 ஆம் திகதி ஏற்பட்ட ஹீத்ரோ விமான நிலைய மின் இடையூறு சர்வதேச அளவில் பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறன.

ரஷ்யா தாக்கி விட்டது என்று விட்டு வாளாவிருக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

இளைய அப்துல்லாஹ் – லண்டன்

Share.
Leave A Reply