மியான்மர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய வயோதிப பெண் ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தலைநகர் நேபிடாவில், 63 வயதான வயதில் பெண் ஒருவரையே, செவ்வாய்க்கிழமை (1), மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டுள்னர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.